சுண்ணாம்பும் வெண்ணையும்..

மனதில் ஏற்படும் காயம் உடம்பின் ஒட்டுமொத்த இயக்கத்தையே மங்க வைக்கிறது.பதிவுலகம்தான் ஓரளவு கவலைகளை மறக்கடிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.இன்னமும் அதே நிலையில்தான் நான், முகப்புத்தகத்தில்,பஸ்ஸில்,மெயிலில் ஆறுதல்படுத்திய, ஆறுதலாய் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

########################################################################



'அந்த டேபிள்'ல இலையை எடும்மா'

'மூணாவது டேபிளுக்கு சாம்பார் கொண்டு போ'

காலை நேர பரபரப்பிலிருந்து உதயம் ஹோட்டல்.

' யோவ் எவ்ளோ நேரமாச்சு தோசைன்னு சொல்லி இன்னும் காணோமே சிறுகுடல பெருங்குடலு சாப்பிடறதுக்குள்ள கொண்டு வந்துரு' சர்வரை பார்த்து எகிறிக்கொண்டிருந்தவருக்கு கண்டிப்பா பி.பி. இருக்கும்..

ஓனரின் தம்பி கல்லாவை ஃபுல்லாவே ஆக்கிரமித்து இருந்தார்.

'தம்பீ ரெண்டு இட்லி ஒரு வடை மட்டும் போதும்பா'
அறுபதைத் தாண்டிய ஒருவர் சர்வர் குமரேசனிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே 

'தெரியும் நீங்க அதுக்கு மேல ஆர்டர் பண்ண மாட்டீங்கன்னு அதான் டெய்லி வர்றீங்களே' வார்த்தைகளின் ஸ்வரம் மாறியிருந்தது.

'ராசு அந்த கிழத்துக்கு ரெண்டு இட்லியாம் சீக்கிரம் கொடு'

பெரியவரின் டேபிளில் இட்லியை அலட்சியமாக வைத்தான்.
பதினைந்து ரூபாய் பில்லை கவுண்டரில் செலுத்திவிட்டு வெளியேறினார் அந்தப் பெரியவர்..

சம்பள நாள்..

ஓனர் ராஜன் எல்லோருக்கும் பணத்தை பிரித்துக் கொடுத்துவிட்டு குமரேசனை மட்டும் உட்கார சொன்னார்.

'உனக்கு எத்தனை குழந்தைங்க?'

'ஆண் ஒன்னு பொன்னு ஒன்னுண்ணே'

'ரெண்டையுமே ஒரே மாதிரிதான் கவனிப்பியா இல்ல..?'

'இதென்ண்ணே கேள்வி ரெண்டையும் ஒரே மாதிரிதான் கவனிப்பேன்'

'ஓ அப்படியா அதேமாதிரிதான் இந்த எனக்குஹோட்டலும் 
ஒரு டீ சாப்பிடறவரும் கஸ்டமருதான்,கல்யாண சாப்பாடு ஆர்டர் பண்றவரும் கஸ்டமர்தான்.

' நீ நேத்து இவர்கிட்ட என்ன சொன்னே'

அதே பெரியவர் இன்னொரு அறையிலிருந்து வரவும் மேற்கொண்டு பேச முடியாமல் குமரேசனின் உதடுகள் தந்தியடிக்க..

'இவரு என் சித்தப்பாதான் நம்ம ஹோட்டல் நிர்வாகம்,வேலையாட்கள் எப்படி இருக்காங்கன்னு பார்க்கிறதுக்காகவே ஒரு பத்து நாளா கஸ்டமர் மாதிரி வரச்சொன்னேன்.ஆனா உன் நடவடிக்கை 'ல மட்டும் வித்தியாசம். அது என்னய்யா ரெண்டு இட்லி சாப்பிடறவன் மட்டம்,நெறையா சாப்பிடறவன் ஒசத்தியா, ஒரு கண்'ல வெண்ணையையும் மறு கண்'ல சுண்ணாம்பையும் வெச்சிருக்ககூடாது உன் கணக்கு எல்லாம் செட்டில் பண்ணியாச்சு நீ கெளம்பலாம்..

'நன்றி மீண்டும் வருக' என்ற போர்டு குமரேசன் வெளியேறியபோது கண்ணில் பட்டது..

Post Comment

52 வம்புகள்:

சசிகுமார் said...

சீக்கிரமே தங்கள் மனஉளைச்சலில் இருந்து விடு பட்டதற்கு மிக்க நன்றி அந்த இறைவனுக்கு.

கதை அருமை நண்பா இது போன்று சிறியதாக இருந்தால் படிப்பதற்கும் நன்றாக இருக்கு.

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

வாங்க பாஸ்! :)
சந்தோசமா ஆட்டத்த ஆரம்பிங்க மறுபடியும்..

அரபுத்தமிழன் said...

'நன்றி மீண்டு(ம்) வ‌ந்ததற்கு'

எம் அப்துல் காதர் said...

ரைட்டு!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல கதை நண்பரே...

கவலைகளிலிருந்து மீண்டு வந்தமைக்கு வாழ்த்துக்களும்... மீட்டு வந்தவர்களுக்கு நன்றியும்...

சாந்தி மாரியப்பன் said...

எல்லாம் சரியாயிடுச்சு போலிருக்கு :-))

கதையும் ஜூப்பர்..

ஸாதிகா said...

ஆஹா..அருமையான சிறுகதை.என்றென்றும் புத்துணர்ச்சியுடன் வலையுலகில் பவனி வர வாழ்த்துக்கள்!

நாடோடி said...

க‌தை ந‌ல்லா இருக்கு இர்ஷாத்.. வாழ்த்துக்க‌ள்

திரும்ப‌ எழுத‌ வ‌ந்த‌தில் ச‌ந்தோச‌ம்..:)

அப்துல்மாலிக் said...

என்னெதிது, ஏன்

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்கு கதை. முடித்த விதமும்:)!

Anisha Yunus said...

நல்ல கதை....எந்த வேலையிலும் நிதானமும், அக்கறையும் ஒன்று போல் எப்பவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சிறக்க முடியும். நன்றி பகிர்விற்கு.

vasu balaji said...

சபாஷ்:)

Menaga Sathia said...

நல்ல கதை!!

Chitra said...

எப்படி இருக்கீங்க?
கதை, ரொம்ப நல்லா இருக்குதுங்க.

Unknown said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

ஸ்ரீராம். said...

அழகிய கதை. வியாபாரிகள் இப்படியொரு நியாயம் வைத்திருந்தால் நல்லதுதான். படமும் அருமை.

cheena (சீனா) said...

அன்பின் இர்ஷாத்

இயல்பு நிலைக்குத் திரும்பியமை மகிழ்ச்சியினைத் தருகிறது. ஆண்டவனுக்கு நன்றி.

கதை இயல்பான நடையில் செல்கிறது. அனைத்து வாடிக்கையாளர்களையும் ஒரே மாதிரித் தான் நடத்த வேண்டும் என்பது பொது விதியாகவும், சில நலம் விரும்பிகளையும், பொருட்கள் அதிகம் வாங்குபவர்களையும் சிறப்பாக நடத்தலாம் என்பது சிறப்பு விதியாகவும் இருந்தால் தான் நிறுவனம் தழைக்க முடியும்.

நல்வாழ்த்துகள் இர்ஷாத்
நட்புடன் சீனா

ஆமினா said...

நல்ல கதை..... தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.......

இனியும் எந்த கவலையும் இல்லாமல் வலம் வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

புல்லாங்குழல் said...

கதைக்கு பெரிய பிளஸ் பாயிண்ட் அந்த படம். பிரிலியண்ட்.

Kanmani said...

மீண்டும் எழுத வந்தமைக்கு வாழ்த்துக்கள் இர்ஷாத்,கதை சூப்பர் படம் கதைக்கு மேலும் மெருகூட்டுகிறது எங்கே கிடைக்குது இந்த படங்கள் உங்களுக்கு.

Unknown said...

உங்கள் கவலையில் இருந்து மீண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்!

கதை அருமை. தண்டனை கொஞ்சம் அதிகம் என்பது என் தாழ்மையான கருத்து!

//அனைத்து வாடிக்கையாளர்களையும் ஒரே மாதிரித் தான் நடத்த வேண்டும் என்பது பொது விதியாகவும், சில நலம் விரும்பிகளையும், பொருட்கள் அதிகம் வாங்குபவர்களையும் சிறப்பாக நடத்தலாம் என்பது சிறப்பு விதியாகவும் இருந்தால் தான் நிறுவனம் தழைக்க முடியும்//

சீனா அய்யாவை ஆமோதிக்கிறேன்...

ஜெயந்தி said...

எந்த பிரச்சனை இருந்தாலும் டென்சனாகாமல் நிதானமாக அணுகுங்கள். காலம் பிரச்சனைகளை காணாமல் போகச் செய்யும். எல்லாமே அனுபவங்கள்தான்.

கதை சொல்லும் நீதி அருமை.

Unknown said...

உங்கள் மனஉளைச்சலில் இருந்து மீண்டு வந்ததற்கு நன்றி.
கதை அருமையா இருக்குங்க..வாழ்த்துக்கள்!

ஹுஸைனம்மா said...

கதை நல்லாருக்கு.

வார்த்தை said...

இப்படி முதலாளி இருந்தால் தான் ஹோட்டலும் உருப்படும், மனிதமும் உருப்படும்.

சிவராம்குமார் said...

நல்ல கதை! தப்பை உணர்த்தி மன்னிப்பு கொடுத்திருக்க்லாமோன்னு தோணுது!

ILA (a) இளா said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன், நன்றி!

Radhakrishnan said...

நல்ல படிப்பினை கதை.

Asiya Omar said...

கதையை எடுத்து கண்ணில் ஒற்றி கொள்ளலாம் போல இருக்கு.அருமை,நிறைய கதாசிரியர்களை விரு்து தந்து உருவாக்கிய பெருமையும் உங்களுக்கு உண்டு சகோ.

Zakir Hussain said...

To Bro.Irshad

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும்...வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஒடுவதில்லை...வாடி நின்றால் ஒடுவதில்லை...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தொழில்தொழில் செய்வோருக்கு வாடிக்கையாளர்
அனைவரும் சமம்தான். இதை மதிக்காதவர்களுக்கு
இந்தக் கதை ஒரு நீதி!
கலக்குங்க இர்ஷாத்!

ஜெயசீலன் said...

நல்லக் கதை... வாழ்த்துக்கள்...

அதிரை என்.ஷஃபாத் said...

பழமொழிக்கு ஏற்ற படுசூப்பரான கதை.. வாழ்த்துக்கள்...

www.vaasikkalaam.blogspot.com

Mc karthy said...

irshath Rocks again.Super story.

Ahamed irshad said...

வாங்க‌ ச‌சிகுமார் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ Balaji saravana வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ அரபுத்தமிழன் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ அப்துல் காதர் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ வெறும்பய வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ அமைதிச்சாரல் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ ஸாதிகா வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ ஸ்டீப‌ன் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ அப்துல்மாலிக் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி(ம‌ன‌தில் வ‌லி மாலிக்)

Ahamed irshad said...

வாங்க‌ ராமலக்ஷ்மி வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ அன்னு வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ பாலாண்ணே வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ Menagasathia வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ Chitra வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி(ஓர‌ள‌வு)

வாங்க‌ ஸ்ரீராம் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ சீனா ஐயா வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ ஆமினா வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ நூருல் அமீன் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ Kanmani வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ தஞ்சாவூரான் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ ஜெயந்தி வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Jaleela Kamal said...

பதிவு போட ஆரம்பித்து விட்டீர்களா?
நல்லது வாழ்த்துக்கள் , அருமையான கதை

Ahamed irshad said...

வாங்க‌ ஜிஜி வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ ஹுஸைனம்மா வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ வார்த்தை வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ சிவா வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ இளா வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.


வாங்க‌ Radhakrishnan வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ asiya omar வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.


வாங்க‌ Zakir Hussain வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி(க‌ண்டிப்பா சகோ.ஜாஹிர்)


வாங்க‌ NIZAMUDEEN வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

Ahamed irshad said...

வாங்க‌ Jayaseelan வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ ஷஃபாத் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

வாங்க‌ karthy வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

இமா க்றிஸ் said...

கதை நல்லா இருக்கு இர்ஷாத்.

Ahamed irshad said...

வாங்க‌ இமா வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

r.v.saravanan said...

கதை நல்ல மெசேஜ் இர்ஷாத் கவலைகளில் இருந்து மீண்டு வந்ததுக்கு
வாழ்த்துக்கள்

sabeer.abushahruk said...

கதையின் கரு மனதைக் கவர்ந்தது. வாழ்துக்கள்
- சபீர்

இராஜராஜேஸ்வரி said...

ஒரு டீ சாப்பிடறவரும் கஸ்டமருதான்,கல்யாண சாப்பாடு ஆர்டர் பண்றவரும் கஸ்டமர்தான்.

பதிவல்ல.. படித்துக்கொள்ள வேண்டிய படிப்பினை..

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates